Total Pageviews

Monday, March 3, 2014

திருப்புகழ் 1296



நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே

வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.


நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக்கண் ...... டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத்தந் ...... தருள்வாயே


கலியுக முடிவில் மேகத்தின் வழியாக தேவதூதர்கள் புடைசூழ இரங்கி வரப்போகிர கல்கி உலகில் அதர்மத்தை அழித்து தர்மத்தை - சத்திய யுகத்தின் நிம்மதியான வாழ்வை தருவார் என்ற உண்மையை உணர்ந்த பக்தர்கள் --சூது வாதுக்கு பயந்ததனால் கலியுகத்தில் வாழ தகுதியற்றவர்களான பேதைகளுக்கு உனது மார்பில் இருக்கும் மாலையை சூட்டி உனது காவலால் அவர்களது வாழ்வை நறுமணம் உள்ளதாக மாற்றுவீராக !

எல்லா வேதங்களும் பக்தர்களை மணவாட்டிகளாகவும் யுக புருஷனை மணவாளனாகவும் சித்தரிக்கின்றன ! ராமருக்கு சீதையாகவும் கிருஷ்ணருக்கு ராதையாகவும் நியாயத்தீர்ப்பு நாளில் இயேசுவுக்கு மணவாட்டிகளாகவும் சித்தரிக்கபடுகின்றன ! இந்த பக்தர்கள் மனித வாழ்வில் ஞானம் வளராத சூழ்னிலையில் குறத்திகளாகவே இருந்தாலும் பக்தி ; இறைஅச்சம் என்ற காதலால் யுக புருஷனுக்கு உறவாகி அவனது குருகுல வாழ்வை பெறுகின்றனர் !


வேல்கொண்டு வேலைப்பண் ...... டெறிவோனே
---உன் வேலாயுதத்தைக் கொண்டு கடலினை முன்பு வற்றும்படி செலுத்தியவனே,


வேல் என்பது மெய்ஞானம் இறைவனது பிரதினிதி என்கிற வல்லமைக்கு அடையாளமாகும் ! அந்த வேல் ஆதியிலே உலக படைப்பின் போது ஜலத்திலிருந்து ஜலத்தை பிறித்தது ! அதாவது கடல் மட்டுமே இருந்த நிலையில் கடலிலிருந்து ஜலத்தை வின்வெளியில் சிதறப்பண்ணி அவைகளே நட்சத்திரங்களாகவும் கோள்களாகவும் மாறின !

ஆதியாகமம் :1 அதிகாரம்

6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள் ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.



வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே.


கடவுளது படைப்பு தொடங்கியவுடனேயே அசுரர்கள் இருளாக அதில் வந்து அமர்ந்து குழப்பத்தை உண்டாக்க தொடங்கிவிட்டனர் !

1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.

அந்த அசுர மாயைகளை அழித்து மெய்ஞானத்தை மனிதர்களுக்கு வாரிவழங்கி அவர்களுக்கு ரட்சிப்பை கொடுக்கிறவராகிய இறைதூதன் --யுக புருஷன் --சற்குருவாக பூமிக்கு கடவுளால் அனுப்பப்பட்டவன் ! படைப்பின் போது கடவுளின் ஆவியாக அசைவாடிக்கொண்டிருந்தவர் ! அவரே போகரால் ``முருகு `` மாறி வருகிறவர் என அறிமுகம் செய்யப்பட்டார் ! படைக்க பட்ட அனைத்தும் இந்த யுக புருஷன் மூலமாகவே படைக்க பட்டது !