Total Pageviews

Sunday, January 17, 2016

கந்தர் அநுபூதி 3 , 5 ,12

கந்தர் அநுபூதி 3





ஆகாயம் வெப்பம் மண் நீர் இதமான காற்று ஆகிய பஞ்சபூதங்களா மனிதர்க்கு உள்ளுணர்வாக விளையும் ஞானமா அல்லது இறைதூதர்கள் மூலம் வெளிப்படுகின்ற நான்கு வேதங்களா அல்லது ஆறுமார்க்கங்களாக பூமியை வழிநடத்தும் சண்முகமா உம்மை ஏவ்வாறு உணர்வது?

நானாகிய என் மனத்தை நீ ஆண்டுகொண்டால் அவ்விடத்தில் உன்னை உணரலாகுமல்லவா?

கந்தர் அநுபூதி 5



மனதுக்கு இதமான ஆறுதல் பெண்களிடத்து உண்டு என மடந்தையர்களிடம் உலகமே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிறதாம்

அகமாயை ஜகமாயை என உள்ளும் பறம்பும் விதவிதமாக மனிதனை கட்டுகிற மகாமாயைகளை களையும் திறமை ஞானத்தின் அதிபதியான அதிதேவர் ஆதிசேசனுக்கே உண்டு அதாவது அவரது வியாபகமான முருகனுக்கே உண்டு அதற்கு அவர் ஆறுமார்க்ங்களை பூமியில் இறைதூதர்கள் மூலமாக கொடுத்து ஒவ்வொரு மனித ஆத்மாவையும் வேறுவேறு நாட்டில் வேறுவேறு மதங்களில் மாறிமாறி பிறக்கவைத்து கற்றுக்கொடுக்கிறார்

தனது ஆறுமுகத்தை முருகன் மொழிந்துவிட்டார் அதாவது சொல்லிவிட்டார்
ஆனால் மனிதர்களோ மாயைகளை ஒழிக்க முயற்சிப்பதில்லை

இந்த மதத்தில் பிறந்து மற்ற மதங்களை காறிகாறி துப்புகிறார்கள் அடுத்த பிறவியில் அந்த மதத்தில் பிறந்து இந்த மதத்தை காறிகாறி துப்புகிறார்கள்

அருணகிரிநாதர் வாழ்ந்த காலத்தில் சைவர்களும் வைணவர்களும் மார்க்க சண்டை கள் செய்து இரத்தத்தை ஓடவிட்டுக்கொண்டிருந்தனர்

சமரசவேதாந்தியான அருணகிரிநாதர் அதை சாடுகிறார் அவரின் திருப்புகழ் பாடல்கள் அனைத்திலும் சிவகுமாரனே என ஆரம்பித்து பெருமாளே என முடித்திருப்பார்

கந்தர் அநுபூதி 12


பூமியில் புண்ணியம் மிகுதியாக செய்தவர்கள் இந்திரலோகம் சென்று அதன் பலனை அனுபவித்துவிட்டு பின்பு மீண்டும் மனிதனாக பிறப்பார்கள் என்கிறது கீதை

ஆகவே இந்திரனை செம்மையானவன் ஏன்கிறார் அருணையார்

இந்திரனின் மகளான தேவானையை முருகன் களவெடுத்து திருமணம் செய்துகொள்கிறாராம்

அதாவது செம்மையான நமது நற்குணங்களை முருகன் நேசித்து நமக்கு குருமார்களை அனுப்பி எப்போதும் நாம் வளரும்படியாக நம்மை வழிநடத்திக்கொண்டே இருப்பார் . நமக்கு தெரியாமலேயே நம்மை அவர் வழினடுத்துவதால் இதை களவு என்கிறார் அருணையார்

ஆண்பெண் பேதங்களே இச்சையை தூண்டுகிறது

பலமுறை பூமியில் ஆணாகவும் பெண்ணாகவும் நானே பிறந்திருக்கிறேன் என்பதை உணராமல் பெண்ணிச்சையை கடர முடியாது

தனக்குள்ளேயே ஆணும்பெண்ணும் அடக்கம் என்ற ஞானத்தால் சிவன் காமத்தை சுட்டெரித்தார் ஆகவே சிவனை பெம்மான் என்பார்கள்

முருகனும் ஆண்பெண் பேதத்தை கடந்தவர் பிறப்பு இறப்பு அற்றவர் அதாவது அதிதேவர்களுள் ஒருவரான ஆதிசேசனே முருகன்

மனிதர்களின் மனதில் அலைஅலையாக சிந்தனைகள் சொற்கள் எழும்பிக்கொண்டே இருக்கும் சும்மாவே இருக்காது
முருகன் அருணகிரிக்கு உபதேசித்த வார்த்தை சும்மாயிரு

சற்குருநாதரிடமிருந்து அந்தவார்த்தை வந்ததுமே நிற்விகல்பசமாதி அருணையாருக்கு சித்தித்து விட்டது

குருவாசகம் நமக்கென வந்தால்போதும் அது அப்படியே நம் ஆத்மாவை வசப்படுத்தி நம்மை தெளியவைத்து விடும்

ரமணாசிரமத்திற்கு சற்று மேற்கேயுள்ள முதலியார்களுக்கு பாத்தியப்பட்ட. முருகன் கோவிலில் அவர் எத்தனை ஆண்டுகள் தவத்தில் இருந்தார் என யாருக்கும் தெரியாது அவருக்கும் தெரியாது

ஆனால் காமக்கசடுகள் நீங்கியவராக பாவங்கள் கழிந்தவராக பரிசுத்தம் அடைந்தபோது அவர் முருகனால் எழுப்பப்பட்டார் பாடு என பணிக்கப்பட்டார் வேலால் அவர் நாவில் எழுதினர்  அருளில் நிரம்பிய வார்த்தைகள் அவரிடமிருந்து வெளிப்பட்டது

நாராயணனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணனாய

ஆதிசேஷனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ ஆதிசேஷாய

நாராயணியாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ நாராயணியாய

சிவனாக வெளிப்பட்ட ஓரிறைவனையே நமஸ்கரிக்கிறோம்
ஓம் நமோ சிவாய

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி